/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுதந்திர தினத்தில் 'டாஸ்மாக்' மது கடைகளுக்கு விடுமுறை
/
சுதந்திர தினத்தில் 'டாஸ்மாக்' மது கடைகளுக்கு விடுமுறை
சுதந்திர தினத்தில் 'டாஸ்மாக்' மது கடைகளுக்கு விடுமுறை
சுதந்திர தினத்தில் 'டாஸ்மாக்' மது கடைகளுக்கு விடுமுறை
ADDED : ஆக 12, 2025 07:40 PM
ஊட்டி; சுதந்திர தினத்தை ஒட்டி இம்மாதம், 15ம் தேதி டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:
சுதந்திர தினத்தினை ஒட்டி, 15ம் தேதி தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் ஆகியவைகளின் கீழ், மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், ஓட்டல்களை சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.
டாஸ்மாக் கடைகள், தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் ஏதேனும் திறந்திருப்பது பொது மக்களுக்கு தெரிய வந்தால் மதுவிலக்கு மற்றும் அமலாக்கம், 0423--2223802; உதவி ஆணையர் 0423- -2443693; டாஸ்மாக் மாவட்ட மேலாளர் 0423--2234211,' ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.