/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் நடந்த தேயிலை ஏலத்தில் ரூ.16.39 கோடி வருமானம் ஒரே வாரத்தில் 3.41 கோடி மொத்த வருமானம் அதிகரிப்பு

ADDED : மார் 18, 2024 12:34 AM
குன்னுார்;குன்னுாரில் நடந்த தேயிலை ஏலத்தில், 16.39 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 11வது ஏலத்தில், '12.15 லட்சம் கிலோ இலை ரகம்; 3.98 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம் 16.13 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது.
அதில், '10.95 லட்சம் கிலோ இலை ரகம், 3.63 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, 14.58 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்றது. சராசரி விலை கிலோவுக்கு, 101. 63 ரூபாயாக இருந்தது. 16.39 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. டஸ்ட் ரகத்திற்கு, 100.39 ரூபாய்; இலை ரகத்துக்கு, 105.35 ரூபாய் எனவும் விலை இருந்தது.
கடந்த, 10வது ஏலத்தை விட, 2.41 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது. 1.60 லட்சம் விற்பனையும் அதிகரித்தது. 90.41 சதவீதம் விற்பனையாகியது. ஒரே வாரத்தில், 3.41 கோடி ரூபாய் மொத்த வருமானம் அதிகரித்தது.
இந்த ஆண்டுக்கான ஏலத்தில் முதல் முறையாக 100 ரூபாய்க்கு மேல் சராசரி விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக உயர்ந்த இலை ரகத்திற்கு 115.25 ரூபாய், டஸ்ட் ரகத்திற்கு 109. 32 ரூபாய் அதிகபட்ச விலையாக கிடைத்தது. நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவு இந்த ஏலத்தில் வரத்து, விற்பனை, சராசரி விலை என அனைத்தும் உயர்ந்தது.
கடந்த ஜன., பிப்., பனிப்பொழிவின் போது எடுக்கப்பட்ட பசுந்தேயிலையில் தயாரான தேயிலை தூளுக்கு கிராக்கி அதிகரித்து வருகிறது.