/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை ஏலம் : ஒரே வாரத்தில் ரூ. 87 லட்சம் சரிவு
/
தேயிலை ஏலம் : ஒரே வாரத்தில் ரூ. 87 லட்சம் சரிவு
ADDED : அக் 26, 2025 08:51 PM
குன்னூர்: கோவை ஏல மையத்தில் ஏலம் நடக்காததால் கடந்த ஏலத்தை விட, 87 லட்சம் ரூபாய் வருவாய் சரிந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர், டீசர்வ் கேரள மாநிலம் கொச்சி ஏல மையங்களில் கடந்த 22, 23 தேதிகளில், 43வது ஏலம் நடந்தது. மொத்தம், 31.59 லட்சம் கிலோ வரத்து இருந்தது; 28.88 லட்சம் கிலோ விற்றது. சராசரி விலை கிலோவிற்கு குன்னூரில் ரூ.99.78; டீசர்வில் ரூ.87.43 கொச்சியில் ரூ.169.51 என இருந்தது. 35.63 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது.
கடந்த வாரத்தில், 32.57 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், இந்த வாரம், 98 ஆயிரம் கிலோ வரத்து குறைந்தது; கடந்த ஏலத்தில் 29.19 லட்சம் கிலோ விற்ற நிலையில், 31 ஆயிரம் கிலோ விற்பனை குறைந்தது. கோவை ஏல மையத்தில், இந்த வாரம் ஏலம் நடத்தப்படவில்லை. இதனால், கடந்த ஏலத்தை விட, 87 லட்சம் ரூபாய் வருவாய் சரிந்தது.
எனினும், சராசரி விலையில் சிறிய ஏற்றம் காணப்பட்டது.

