ADDED : பிப் 23, 2026 04:26 AM

குன்னூர்: - தென் மாநில அளவிலான 8வது தேயிலை ஏலங்களில், வரத்து, விற்பனை, சராசரி விலை உயர்வு ஏற்பட்டு மொத்த வருவாயும் கணிசமாக ஏற்றம் கண்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் தேயிலை ஏல மையத்தில் நடந்த 8வது ஏலத்தில், 9.83 லட்சம் கிலோ தேயிலை வந்தது. 8 .87 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனையானது.
கிலோவுக்கு 119.39 ரூபாயாக இருந்தது. 10.59 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. டீசர்வ் மையத்தில் 71 ஆயிரத்து 20 கிலோ ஏலத்திற்கு வந்ததில், 70 ஆயிரத்து 340 கிலோ என 99.04 சதவீதம் விற்பனையானது. சராசரி விலை கிலோவுக்கு, 113.43 ரூபாய் என இருந்தது, 79.78 லட்சம் ரூபாய் மொத்த வருவாயும் கிடைத்தது.
கோவை ஏல மையத்தில், 3.88 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 3.49 லட்சம் கிலோ என 89.55 சதவீதம் விற்பனையானது.சராசரி விலை கிலோவுக்கு 166.48 ரூபாயாக இருந்தது. மொத்த வருவாய் 5.81 கோடி ரூபாய். கொச்சி ஏல மையத்தில் 9.15 லட்சம் கிலோ வரத்து இருந்தது. 8.66 லட்சம் கிலோ என 94.66 சதவீதம் விற்றது.
சராசரி விலை கிலோவுக்கு 184.16 ரூபாய் என இருந்தது. மொத்த வருவாய் 15.95 கோடி ரூபாய்.
தென் மாநில அளவில் 4 மையங்களிலும் மொத்தமாக 8வது ஏலத்தில் 23.57 லட்சம் கிலோ வரத்து இருந்தது.
21.73 லட்சம் கிலோ விற்பனையானது. மொத்த வருவாய் 33.15 கோடி ரூபாயாக இருந்தது. முந்தைய 7வது ஏலத்தில், 22.94 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 20.74 விற்பனையாகி, மொத்த வருவாய், 31.14 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஏலத்தை ஒப்பிடுகையில், 8வது ஏலத்தில், 64 ஆயிரம் கிலோ தேயிலை வரத்து. 98 ஆயிரம் கிலோ விற்பனை அதிகரித்தது.
தென் மாநில அளவிலான 8வது தேயிலை ஏலங்களில், வரத்து, விற்பனை, சராசரி விலை உயர்வு ஏற்பட்டு மொத்த வருவாயும் கணிசமாக ஏற்றம் கண்டது.
