தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வயநாட்டில் தேயிலை தின கொண்டாட்டம்

 வயநாட்டில் தேயிலை தின கொண்டாட்டம்

 வயநாட்டில் தேயிலை தின கொண்டாட்டம்


ADDED : மே 23, 2026 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 01:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்: வயநாடு பகுதியில் தேயிலை வாரியம் சார்பில், சர்வதேச தேயிலை தின விழா நடந்தது.

தேயிலை வாரியம், கூடலுார் மண்டல அலுவலகம் சார்பில், கேரளா வயநாடு மானந்தவாடி பகுதியில் உள்ள, பிரியதர்ஷினி தேயிலை தோட்டத்தில், 'தேயிலையை நிலை நிறுத்துதல்; சமூகங்களுக்கு ஆதரவு அளித்தல்' எனும் கருப்பொருளுடன், சர்வதேச தொழிலை தின விழா கொண்டாடப்பட்டது.

தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர் மீரா வரவேற்றார். வருண்மேனோன் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மானந்தவாடி, துணை ஆட்சியர் அப்துல் சாகர் பேசுகையில், ''சர்வதேச அளவில் பொருளாதாரத்தை மேம்படுத்தும், தேயிலை தொழிலை பாதுகாக்க வேண்டும். தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்த வேண்டும். சர்வதேச சந்தையில் தேயிலையும் பங்களிப்பை மேம்படுத்த வேண்டும்,'' என்றார்.

தொடர்ந்து, சிறந்த தேயிலை பறிப்பாளர், சிறந்த தொழிற்சாலை பணியாளர், வாழ்நாள் சாதனையாளர், வளரும் இளம் தேயிலை தொழிலாளர் ஆகிய பிரிவுகளின் கீழ், தொழிலாளர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தேயிலை எஸ்டேட் பொது மேலாளர் மனோஜ் ஆர்ச்சிபால்டு, நிர்வாக ஆலோசகர் வின்சன்ட் மேத்தியூ உட்பட பலர் பங்கேற்றனர். தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர் அஞ்சலி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us