/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'கொப்புள' நோய் தாக்கத்தால் 5 ஆயிரம் ஏக்கர் பாதிப்பு: தேயிலை விவசாயிகள் கவலை
/
'கொப்புள' நோய் தாக்கத்தால் 5 ஆயிரம் ஏக்கர் பாதிப்பு: தேயிலை விவசாயிகள் கவலை
'கொப்புள' நோய் தாக்கத்தால் 5 ஆயிரம் ஏக்கர் பாதிப்பு: தேயிலை விவசாயிகள் கவலை
'கொப்புள' நோய் தாக்கத்தால் 5 ஆயிரம் ஏக்கர் பாதிப்பு: தேயிலை விவசாயிகள் கவலை
ADDED : ஜன 07, 2024 11:29 PM

ஊட்டி;-நீலகிரியில் தேயிலை தோட்டங்களில் கொப்புள நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால், 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான தேயிலை தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நீலகிரியில், மலை காய்கறிகளுக்கு அடுத்தபடியாக, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள், தேயிலை பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, விலை வீழ்ச்சி காரணமாக, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இடுபொருட்கள் மற்றும் கூலி உயர்வு உள்ளிட்ட செலவினங்களை கணக்கிட்டால், தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு கிடைத்து வரும், 18 ரூபாய் போதுமானதாக இல்லை.
இதனால், விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா உள்ளிட்ட பகுதிகளில் வானம் தொடர்ந்து மேகமூட்டமாக காணப்படுவதால், சூரிய வெளிச்சம் இல்லாமல், சுமார், 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை தோட்டங்களை கொப்புள நோய் தாக்கியுள்ளது.
ஏற்கனவே, மகசூல் குறைந்தும், விலை வீழ்ச்சியாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மேகமூட்டமான காலநிலை நீடிப்பதால், கொப்புள நோயால், மேலும் மகசூல் குறைய வாய்ப்புள்ளது.
இதனால், இழப்பு அதிகரிக்கும் என்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தோட்டக்கலை துறையினர் கள ஆய்வு நடத்தி விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழக்க வேண்டும். என, வலியுறுத்தப்பட்டுள்ளது.