தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உஷார்

 தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உஷார்

 தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உஷார்


ADDED : டிச 01, 2025 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2025 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னூர்: குன்னூர் அதிகரட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏழு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் இரவில் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம். என, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னூர் அருகே, மேலூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முகாமிட்ட, 7 காட்டு யானைகள் இரவில் தூதுார்மட்டம், கொலக்கம்பை பகுதிகளில் மேரக்காய்களை உட்கொண்டு பகலில் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த யானை கூட்டம் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட அதிகரட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உலா வருகிறது.

குந்தா வனச்சரகர் செல்வகுமார் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

யானைகள் நடமாட்டத்தால் அதிகரட்டி, அல்லாடா வேலி, பலாமரத்து லைன், கிளிஞ்சாடா காக்காச்சி, கெந்தளா, சன்னி சைடு, கிரேக்மோர் பகுதிகளில் இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம். என, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொலக்கம்பை, சட்டன் எஸ்டேட், லூசியானா, உட்லாண்ட்ஸ், முசாபுரி உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்டம் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த யானைகள் குன்னூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கிளன்டேல் பகுதிக்கு வர வாய்ப்பிருப்பதால் குன்னூர் வனத்துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us