/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழை காரணமாக துளிர்விடும் தேயிலை
/
மழை காரணமாக துளிர்விடும் தேயிலை
ADDED : ஜன 27, 2026 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் மழை காரணமாக, தேயிலை தோட்டங்களில் மகசூல் அதிகரிக்கிறது.
கோத்தகிரியில் மழை பெய்து வருவதால்,மகசூல் படிப்படியாக உயர்ந்து வருகிறது. உரம் இட்டு பராமரிப்பு செய்த தோட்டங்களில், ஓரிரு வாரங்களில் பசுந்தேயிலை அறுவடைக்கு தயாராக வாய்ப்புள்ளது.
தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு,18 முதல் 22 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இந்த விலை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுப்பொருட்களின் விலையேற்றம், கூலி உயர்வு மற்றும் பராமரிப்பு செலவினத்தை கணக்கிட்டால் போதுமானதாக இல்லை. இருப்பினும், கடந்த காலங்களைக் காட்டிலும் இந்த விலை ஓரளவு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

