/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீர் பனி காரணமாக காய்ந்து காணப்படும் தேயிலை
/
நீர் பனி காரணமாக காய்ந்து காணப்படும் தேயிலை
ADDED : பிப் 21, 2026 04:41 AM

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் தேயிலை செடிகள் காய்ந்து காணப்படுவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இந்த தொழிலை , 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகுறு விவசாயிகள் மற்றும், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நம்பி உள்ளனர்.
கடந்த மாதம் பெய்த பனிப்பொழிவு காரணமாக, தாழ்வான பகுதியில், பல நுாறு ஏக்கர் பரப்பளவில் தேயிலை தோட்டம் கருகியது.
குறிப்பாக, கோத்தகிரி பகுதியில் பனியின் தாக்கம் அதிகரித்ததால், மகசூல் கிடைக்காமல் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
தற்போது தேயிலை செடிகளில், இலைகள் முழுமையாக உதிர்ந்து, குச்சிகள் மட்டும் எஞ்சி காணப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு அதிகரித்துள்ளது. மழை பெய்தால் மட்டுமே, பசுந்தேயிலை துளிர்விட வாய்ப்புள்ளது.
மாறாக தற்போது, சுட்டெரிக்கும் வெயில் அடிப்பதாலும், நீர் பனியாலும் தோட்டத்தில் ஈரப்பதம் முழுமையாக குறைந்து, மகசூல் இல்லாமல் உள்ளது.
எதிர்வரும் மாதங்களில், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து பசுந்தேயிலை மகசூல் குறையும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில்,'அரசு பாதிக்கப்பட்ட தேயிலை தோட்டங்களை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

