/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளி நிலத்தில் 'பார்க்' அமைக்க நடவடிக்கை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எதிர்ப்பு
/
பள்ளி நிலத்தில் 'பார்க்' அமைக்க நடவடிக்கை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எதிர்ப்பு
பள்ளி நிலத்தில் 'பார்க்' அமைக்க நடவடிக்கை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எதிர்ப்பு
பள்ளி நிலத்தில் 'பார்க்' அமைக்க நடவடிக்கை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எதிர்ப்பு
ADDED : மார் 07, 2024 04:30 AM

பந்தலுார், : பந்தலுார் அருகே, பள்ளி நிலத்தில் 'பார்க்' அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லியாளம் நகராட்சி சார்பில், பந்தலுார் பஜாரை ஒட்டிய, பத்தாம் நம்பர் பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் சாலையை ஒட்டிய பகுதியில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக தற்போது, 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணியும் டெண்டர் விடப்பட்டது. பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பணி துவங்கப்பட்டதாக கூறி அறிவிப்பு பலகை வைத்து சென்றுள்ளார்.
பள்ளி நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாமலும், வகுப்பறைகள் மற்றும் மாணவர்கள் விளையாடும் மைதானத்தில் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளும் செயலுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பத்தாம் நம்பர் பழங்குடியின கிராமத்திற்கு செல்லம் சாலையை ஒட்டி பழைய கழிப்பிட கட்டடத்தின் பின்பகுதியில், நகராட்சி இடம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது.
அந்த ஆக்கிரமிப்பு பாதுகாப்பு நோக்கில் ஒப்பந்ததாரர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் இணைந்து பள்ளி நிலத்தில் அத்துமீறி நுழைந்து பணி மேற்கொள்ள முயற்சிப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகராட்சி கமிஷனர் குமரி மன்னன் கூறுகையில்,''அந்த நிலம் நகராட்சிக்கு சொந்தமானது. வருவாய்த்துறை மற்றும் நில அளவையர்கள் மூலம் நில அளவு செய்யப்பட்டு, அதன் பின்னரே பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

