/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அருவங்காடு நுாலகத்தில் ஆசிரியர் தின விழா
/
அருவங்காடு நுாலகத்தில் ஆசிரியர் தின விழா
ADDED : செப் 07, 2025 09:01 PM
குன்னூர்; குன்னூர் அருவங்காடு கிளை நுாலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் முன்னாள் ஜனாதிபதி ராதா கிருஷ்ணனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அமல்ராஜ் தலைமை வகித்து பேசுகையில், ''நம் நாட்டின் இரண்டாவது ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5ல் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தவறு, குற்றம் ஆகியவற்றை ஆசு என பழந்தமிழ் நூல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆசுக்களை அகற்றுபவர், ஆசிரியர் என அழைத்து கொண்டாடியது பழந்தமிழர் சமூகம்.
அழியா செல்வமாகிய கல்வியை வேரூன்ற செய்யவும், மாணவர்களை நற்பண்பு மிக்கவராகவும், சமூக அக்கறை உள்ளவர்களாகவும் உருவாக்கும் ஆசிரியர்களை இந்நாளில் அனைவரும் கொண்டாட வேண்டும். எந்த ஒரு நவீன அறிவியல் கண்டுபிடிப்பும் ஆசிரியருக்கு இணையாக முடியாது,'' என்றார்.
நிகழ்ச்சியில் டெம்ஸ் பள்ளி ஆசிரியை மெட்டில்டா, வெடி மருந்து தொழிற்சாலை பள்ளி ஆசிரியை புனிதா, நூலகர் ஜெயஸ்ரீ உட்பட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.