/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது
ADDED : ஜூலை 21, 2025 08:59 PM

ஊட்டி; ஊட்டியில், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு, 13 மற்றும் 11 வயது என இரு மகள்கள் உள்ளனர்.
ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மூத்த மகள் எட்டாம் வகுப்பு, இளைய மகள், 6ம் வகுப்பு படித்து வருகின்றனர். தினசரி மகள்கள் பள்ளிக்கு சென்றதும், பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்புகின்றனர்.
கடந்த, 15ம் தேதி அன்று உறவினர் வீட்டுக்கு சென்று வந்த, 13 வயது சிறுமி உடல் நிலை பாதிக்கப்பட்டு சோர்வாக இருந்தார். உடல் நிலை குறித்து சிறுமியின் பெற்றோர் அவரிடம் கேட்டுள்ளனர். அப்போது, 'அப்பகுதியில் வசிக்கும் விஜய் என்ற வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்,' என்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நேற்று விஜயை கைது செய்தனர்.