ADDED : ஜன 02, 2026 06:10 AM
ஊட்டி: ஊட்டியை சேர்ந்த ஒரு தம்பதியினரின், இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள், வெவ்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில், 15 வயதுடைய மூத்த மகளை, 2023, மார்ச், 3ம் தேதி, ஊட்டி மஞ்சனகொரையை சேர்ந்த, சையது ஹக்கிம்,22, இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து வந்துள்ளார்.
பள்ளி நிர்வாகம் கொடுத்த தகவலின் படி, பெற்றோர் விசாரித்ததில், ஏற்கனவே திருமணமான சையத் ஹக்கிம் மனைவியை பிரிந்து வசித்து வருவது தெரிய வந்தது.
மேலும், சிறுமியிடம் திருமணம் செய்வதாக. ஆசை வார்த்தை கூறி, தனியார் விடுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும், வெளியே கூறினால், கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார் என்பதும் தெரி ய வந்தது. இது குறித்து, பெற்றோர் அளித்த புகாரின், இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போ லீசார் விசாரித்து போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்தனர்.
இவ்வழக்கு, ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், விசாரணையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டதால், சையது ஹக்கிமுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செந்தில் குமார் தீப்பளித்தார்.
மேலும், 'பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில், ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க, நீலகிரி கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, அறிவுறுத் தினார்.
அரசு தரப்பு வக்கீல் செந்தில்குமார் வாதாடினார். குற்றவாளி சையத் ஹக்கிம், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

