/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திருட்டு வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
/
திருட்டு வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
ADDED : ஜன 24, 2025 09:37 PM
கூடலுார்; கூடலுார் ஓவேலி பகுதியில் மூன்று திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய நபருக்கு, 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
கூடலுார் ஓவேலி முல்லை நகர்பகுதியில், 2020 பிப்., 2ல் ராஜூ என்பவர் வீட்டை உடைத்து, 4 பவுன் தங்க நகை; 5ம் தேதி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சத்தியசுந்தரம் வீட்டை உடைத்து ஒன்றை பவன் நகை; செப்., 9ல் ஆருட்டுப்பாறை கிருஷ்ணகுமார் என்பவர் வீட்டை உடைத்து மூன்று பவுன் நகை திருட்டப்பட்டது.
இது தொடர்பாக, நியூஹோப் போலீசார் வழக்கு பதிவு, லாரஸ்டன் பகுதியை சேர்ந்தவர் ரெஜேஸ், 23, என்பவரை கைது செய்து நகைகளை மீட்டனர்.
இது தொடர்பான வழக்கு, கூடலுார் மாஜிஸ்திரேட் கோட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை, நேற்று முன்தினம் விசாரணை செய்த மாஜிஸ்திரேட் சசின்குமார், குற்றவாளிக்கு, 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

