ADDED : மார் 13, 2026 06:32 AM

கோத்தகிரி: கோத்தகிரி தொலை தொடர்பு ஊழியர்களின் குடியிருப்புகள் சேதம் அடைந்து காணப்படுகிறது.
கோத்தகிரி தாலுகா அலுவலகம் அருகில் தொலைபேசி நிலையம் அமைந்துள்ளது. இந்த கட்டடத்தின் ஒரு பகுதியில், ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இயங்குகிறது. தொலை தொடர்பு துறை ஊழியர்கள் தங்கி பணிப்புரியும் வகையில், அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அதில். சில ஊழியர்கள் குடும்பத்துடன் தங்கி பணிப்புரிந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக குடியிருப்பு பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால், ஜன்னல்கள் உடைந்தும், மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விரிசலுடன் காணப்படுகிறது. மேற்கூரை பக்கவாட்டு பகுதியில், காட்டு செடிகள் ஆக்கிரமித்து புதர்போல் காணப்படுகிறது.
போதிய பாதுகாப்பு இல்லாத குடியிருப்பில், ஊழியர்கள் தங்குவதற்கு அஞ்சுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், குடியிருப்பு கட்டடத்தை சீரமைத்து நடவடிக்கை எடுப்பது அவசியம்.
