/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அவலாஞ்சியில் 'மைனஸ்-1' டிகிரி வெப்பநிலை; ஊட்டியில் உறைபனி அதிகரிப்பதால் கடும் குளிர்

ADDED : ஜன 07, 2025 07:24 AM

ஊட்டி; ஊட்டி அருகே அவலாஞ்சியில் 'மைனஸ்-1' டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் டிச., மாதத்திலிருந்து ஜன., இறுதி வரை உறைபனி தாக்கம் இருக்கும்.
அதன்படி, கடந்த சில நாட்களாக அவ்வப்போது உறைபனி பொழிவு உள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று, ஊட்டி உட்பட புறநகர் பகுதிகளிலும் உறைபனி தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், குறைந்தபட்ச வெப்பநிலை, 2 டிகிரி செல்சியசாக இருந்தது. புறநகர் பகுதிகளாக காந்தள், தலைகுந்தா, சாண்டினல்லா ஆகிய பகுதிகளில், ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.
அதேபோல், அவலாஞ்சியில் 'மைனஸ்-1' டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்ததால் கடும் குளிர் நிலவியது.
உறை பனியின் தாக்கத்தால் மலர்கள்; புல்வெளி பாதிக்காமல் இருக்க, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர்களுக்கு போர்வையும்; புல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியும் நடந்து வருகிறது.
இதேபோல், புறநகர் பகுதிகளிலும் விவசாயிகள், தேயிலை கருகாமல் இருக்க தேவையான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.