ADDED : மே 12, 2026 08:44 AM

அ நிறம் | அளவு
கூடலூர்: நீலகிரியில் காட்டு யானை தாக்கி கோவில் பூசாரி பலி உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி பகுதியை சேர்ந்தவர் ராஜப்பன், 40. இவர், அங்குள்ள சித்தப்பாஜி கோவில் பூசாரியாக பணியாற்றி வந்தார். நேற்று, இரவு கோவிலுக்கு சென்று வீட்டுக்கு திரும்பும் வழியில், காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.
உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக, ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மசினகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.
