ADDED : அக் 29, 2026 10:54 PM

அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில் உண்டியலை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.
பந்தலுார் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் இன்று (அக்.,29) காலை பக்தர்கள், கோவிலுக்கு வந்தனர். அப்போது, ஒருவர் கோவில் சிறிய உண்டியலை கையில் எடுத்தபடி வெளியே சென்றதை பார்த்த, பக்தர்கள் இது குறித்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவரை பிடித்து நெலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார், நேரில் வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர், சமீபத்தில் முதிரக்கொல்லி என்ற இடத்தில் கோவில் உண்டியலை உடைத்து, திருடிய வழக்கில் சிறை சென்று திரும்பிய நபர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, ராஜன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
