ADDED : ஜூலை 27, 2026 04:49 AM

கூடலூர்: -: குறிஞ்சி மலர் பூத்துள்ள பகுதிக்கு சுற்றுலாப் பயணியர் செல்வதை தடுக்க வனத்துறையினர் தற்காலிக சோதனைசாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.: கூடலூர் ஜீன்பூல் தாவரம் மையம், சீனகொல்லி, ஓவேலி, குண்டம்புழா, பள்ளிப்படி அம்பலக்காடு, ஊட்டி சாலை ஊசி மலை காட்சி முனை உள்ளிட்ட புல்வெளிகளில் பரவலாக குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் அப்பகுதிகளுக்கு செல்ல தடை விதித்து கண்காணித்து வருகின்றனர். அங்கு செல்பவர்களை, ஒலிபெருக்கி வாயிலாக வெளி யேற்றி வருகின்றனர். நீலக்குறிஞ்சி பூத்துள்ள பகுதிக்கு செல்லும் சாலையின் நுழைவு வாயில் பகுதியில் வனத்துறையினர் தற்காலிக சோதனை சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'குறிஞ்சி பூக்கள் பார்க்க செல்லும் சுற்றுலா பயணியர் யானைகளால் பாதிப்பு ஏற்படும் நிலையால், முன்னெச்சரிக்கையாக, சுற்றுலா பயணியர்களுக்கு அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், தற்காலிக சோதனை சாவடி அமைத்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.
