/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் தற்காலிக டிரைவர் கண்டக்டர்கள் பணி நிறுத்தம் போராட்டம் நடத்தி கலெக்டருக்கு மனு
/
நீலகிரியில் தற்காலிக டிரைவர் கண்டக்டர்கள் பணி நிறுத்தம் போராட்டம் நடத்தி கலெக்டருக்கு மனு
நீலகிரியில் தற்காலிக டிரைவர் கண்டக்டர்கள் பணி நிறுத்தம் போராட்டம் நடத்தி கலெக்டருக்கு மனு
நீலகிரியில் தற்காலிக டிரைவர் கண்டக்டர்கள் பணி நிறுத்தம் போராட்டம் நடத்தி கலெக்டருக்கு மனு
ADDED : டிச 24, 2024 10:43 PM
ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில், அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்களை பணியில் இருந்து திடீரென நிறுத்தி வருவதை தடுத்து, பணி தொடர்ந்து வழங்க கோரி திடீர் போராட்டம் நடந்தது.
மாநிலம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தபோது, அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்க தற்காலிகமாக டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதில், நீலகிரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் கிளைகளில், 350க்கும் மேற்பட்டோர் பணியில் அமர்த்தப்பட்டனர்.
தொடர்ந்து, குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பணியாற்றி வந்த நிலையில், இவர்களை பணியிலிருந்து அரசு போக்குவரத்து கழகத்தினர் நிறுத்தி வருவதால் வாழ்வாதாரம் பாதித்து வருகிறது.
இந்நிலையில், ஊட்டி மத்திய பஸ்ஸ்டாண்ட்டில் தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் நேற்று திடீர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, பிரச்னைக்கு தீர்வு காண கோரி மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்தனர்.
தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் சிலர் கூறுகையில்,'அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலை நிறுத்தம் அறிவித்தபோது, தற்காலிகமாக பணியில் சேருபவர்களுக்கு பணி பாதுகாப்புக்கு மாநில அரசு உறுதி அளித்தது. அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக பணிகளில் பலரும் சேர்ந்தனர். தற்போது இவர்களில் பணிகளில் இருந்து நிறுத்தியுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது, நிரந்தர பணியில் ஆட்கள் எடுக்கும் வரை தற்காலிகமாக பணி வழங்க வேண்டும்,' என்றனர்.