/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ்களை இயக்க தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் தேவைகேற்ப மாற்றம்!பொது போக்குவரத்தில் சிரமத்தை போக்க நடவடிக்கை
/
பஸ்களை இயக்க தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் தேவைகேற்ப மாற்றம்!பொது போக்குவரத்தில் சிரமத்தை போக்க நடவடிக்கை
பஸ்களை இயக்க தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் தேவைகேற்ப மாற்றம்!பொது போக்குவரத்தில் சிரமத்தை போக்க நடவடிக்கை
பஸ்களை இயக்க தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் தேவைகேற்ப மாற்றம்!பொது போக்குவரத்தில் சிரமத்தை போக்க நடவடிக்கை
ADDED : ஜன 12, 2024 11:25 PM
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பொது போக்குவரத்தில்
ஏற்பட்டுள்ள சிரமத்தை போக்க, தேவைகேற்ப தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை
நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில், ஊட்டி அரசு போக்குவரத்து கழக மண்டல கட்டுப்பாட்டில், 'ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், மேட்டுப்பாளையம் கிளை-2,' ஆகிய பணிமனைகள் உள்ளன.
இங்கிருந்து கிராமப்புறங்களுக்கு மட்டுமின்றி, 'திருச்சி, மதுரை, திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற வெளிமாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலம்,' என, 270 வழித்திடத்திற்கு, 335 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சராசரியாக, 1.50 லட்சம் பயணிகள் அரசு பஸ்சை பயன்படுத்துகின்றனர். இங்குள்ள போக்குவரத்து கழகங்களில், 800 டிரைவர், கண்டக்டர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில், 40 சதவீதம் பணியிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக நிரப்பபடாமல் உள்ளன.
இதனால், பணியில் உள்ள ஊழியர்கள் கூடுதல் பணிசுமையுடன் மன உளைச்சலில் பணிபுரிந்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தேவைகேற்ப பணி
இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு.,-ஏ.ஐ.டி.யு.சி., - ஏ.டி.பி., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடந்த, 9ம் தேதியிலிருந்து துவங்கிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் இரண்டு நாட்கள் நடந்த நிலையில், திடீரென, இம்மாதம், 19ம் தேதி வரை ஒத்திவைத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.
வேலைநிறுத்த போராட் டத்தின் போது, தற்காலிகமாக டிரைவர், கண்டக்டர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். தற்போது, ஊழியர்கள் பணிக்கு வந்தாலும், காலி பணியிடங்கள் நிரப்ப படாததால் பெரும்பாலான வழித்தடத்தில் பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. பொங்கல் துவங்க உள்ள நிலையில், சிறப்பு பஸ்கள் இயக்குவது உள்ளிட்ட காரணங்களால், டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறையால் பயணிகள் சிரமப்படும் நிலையை போக்க, நீலகிரி போக்குவரத்து கழகங்களில் நேற்று, 50 க்கு மேற்பட்ட தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை அந்தந்த பணிமனையில் தேவைக்கேற்ப பணியமர்த்தியுள்ளனர்.
பொது மேலாளர் நடராஜ் கூறுகையில்,''நீலகிரியை பொறுத்தவரை, 270 வழித்தடத்தில், 335 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 800 ஊழியர்கள் பணிக்கு தேவை.
காலி பணியிடங்கள் நிரப்பாததால் சில வழித்தடத்தில் பஸ்களை இயக்க முடியவில்லை. ஊழியர்கள் தேவையை கருத்தில் கொண்டு, தகுதியின் அடிப்படையில் தற்காலிகமாக டிரைவர், கண்டக்டர்களை பணியமர்த்த உள்ளோம்,'' என்றார்.