/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாநில நெடுஞ்சாலைகளில் தற்காலிக சீரமைப்பு பணி
/
மாநில நெடுஞ்சாலைகளில் தற்காலிக சீரமைப்பு பணி
ADDED : பிப் 03, 2025 11:15 PM

பந்தலுார்; தமிழகம் -கேரளா செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இடிந்த பகுதிகளை முழுமையாக சீரமைக்காமல், விடப்பட்டுள்ளதால் வாகன விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில் இருந்து, கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கோழிக்கோடு செல்லும் வாகனங்கள், பந்தலுார் மற்றும் சேரம்பாடி வழியாக செல்கிறது. இந்த சாலை பகுதியில் பெரும்பாலான இடங்களில், கடந்த மழையின் போது, சாலை ஓரங்களில் இடிந்து சாலை முழுமையாக சேதமடையும் நிலையில் காணப்பட்டது.
இந்த பகுதிகளை நெடுஞ்சாலை துறை மூலம், முழுமையாக சீரமைப்பதற்கு பதில், மண் மூட்டைகள் அடுக்கி தற்காலிகமாக சீரமைத்து உள்ளனர்.
இதனால், வரும் நாட்களில் மண் மூட்டைகள் கீழ் பகுதிக்கு சென்று விட்டால், இந்த வழியாக வந்து செல்லும் இரு மாநில வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உருவாகும்.
மழைகாலத்தில் சாலை துண்டிப்பு ஏற்படும் அபாயமும் ஏற்படும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அது குறித்து கண்டுகொள்ளாதது வாகன ஓட்டுநர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க முன்வர வேண்டும்.