/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை அமைக்க டெண்டர்: செயல்படுத்த தயக்கம் பொதுமக்கள் புகார்
/
சாலை அமைக்க டெண்டர்: செயல்படுத்த தயக்கம் பொதுமக்கள் புகார்
சாலை அமைக்க டெண்டர்: செயல்படுத்த தயக்கம் பொதுமக்கள் புகார்
சாலை அமைக்க டெண்டர்: செயல்படுத்த தயக்கம் பொதுமக்கள் புகார்
ADDED : மே 29, 2025 11:03 PM
குன்னுார், ; குன்னுார் ஜெகதளா பாலாஜி நகரில் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்ட நிலையில், சாலை அமைக்க விடாமல் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
குன்னுார் அருகே ஜெகதளா பேரூராட்சி, 8வது வார்டு பாலாஜி நகர் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் இருந்து காரக்கொரை மற்றும் ஒசட்டி வரை, 650 மீட்டர் வரை மண் சாலை உள்ளது.
தமிழக அரசின் நகர்புற சாலைகள் உள்கட்ட அமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சாலை அமைக்க, 24.70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது.
இந்நிலையில், இந்த சாலையின் ஒரு பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், சாலை அமைக்க விடாமல், தடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், இப்பகுதியில், 15 ஆண்டுகளுக்கு முன்பு, 50 க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு வீடுகட்ட நிலம் வழங்கி உள்ளது. ஆனால், சாலை வசதி இல்லாததால் பணிகள் கிடப்பில் உள்ளது.
இது தொடர்பாக, பாலாஜிநகர் நல சங்க செயலாளர் சித்தன் தலைமையில் இப்பகுதி மக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்ப்பு முகாமில் கூடுதல் கலெக்டரிடம் மனு வழங்கி தீர்வு காண கோரி வலியுறுத்தினர்.
வார்டு கவுன்சிலர் சஜீவன் கூறுகையில்,''இந்த பகுதியில் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்ட நிலையில், இந்த நிதியை, பேரூராட்சி நிர்வாகம், வேறு வார்டுக்கு மாற்றும் முயற்சி செய்து வருகிறது. இதனை, கைவிட்டு தீர்வு காண கோரி, தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.