தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தெங்குமரஹாடா ஓட்டு சாவடி: பொது பார்வையாளர் ஆய்வு

 தெங்குமரஹாடா ஓட்டு சாவடி: பொது பார்வையாளர் ஆய்வு

 தெங்குமரஹாடா ஓட்டு சாவடி: பொது பார்வையாளர் ஆய்வு


ADDED : ஏப் 13, 2026 12:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 12:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோத்தகிரி: குன்னூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, தெங்குமரஹாடா பகுதியில் ஓட்டு சாவடிகளை பரிசலில் சென்று, தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, தெங்கு மரஹாடா, கல்லம்பாளையம் மற்றும் அல்லிமாயார் பகுதியில், மூன்று ஓட்டு சாவடிகள் உள்ளன. இந்த பகுதிக்கு, சாலை வசதி இல்லாத நிலையில், மாயாற்றை பரிசலில் கடந்து செல்ல வேண்டும்.

இந்நிலையில், குன்னூர் சட்டசபை தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் சுஹாஸ் பரிசலில் சென்று அங்குள்ள பூத்களில் மின்சாரம், குடிநீர் வசதிகள் உட்பட அடிப்படை ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

முன்னதாக, பழங்குடியின கிராமமான குஞ்சப்பனை ஓட்டு சாவடியையும், பாதுகாப்பு கண்காணிப்பு குழுவினருடன் சென்று மக்களுடன் கலந்துரையாடி பூத்களை ஆய்வு மேற்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us