/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிவசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ADDED : பிப் 10, 2025 07:24 AM
குன்னுார் : குன்னுார் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
குன்னுார் மார்க்கெட் வி.பி., தெரு பகுதியில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த சிவ சுப்ரமணியர் சுவாமி கோவில் உள்ளது.
கோவிலில் கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்து அறநிலையதுறை சார்பில் புனரமைப்பு பணிகள் துவங்கின. கோவில் சேவா சங்கத்தினர் பணிகளை மேற்கொண்டனர்.
பணிகள் நிறைவு பெற்ற நிலையில், நேற்று காலை, 10:00 மணியளவில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு விருந்தினராக அரசு கொறடா ராமச்சந்திரன் பங்கேற்றார். முன்னதாக ஹோமம், வேள்வி பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து, முருகர், வள்ளி, தெய்வானை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சிவசுப்ரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து, அன்னதானம், திருக்கல்யாண உற்சவம், இன்னிசை கச்சேரி நடந்தது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்ட னர். முன்னதாக, யாக வேள்விகள்,ஹோமங்கள் நடந்தன. விழாவையொட்டி குன்னுார் நகரம் விழா கோலம் பூண்டிருந்தது.