/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
டென்ட்ஹில் முனீஸ்வரர் கோவில் விழா
/
டென்ட்ஹில் முனீஸ்வரர் கோவில் விழா
ADDED : ஜன 14, 2025 08:17 PM

குன்னுார்:
குன்னுார் டென்ட்ஹில் முனீஸ்வரன் கோவிலில், 56வது ஆண்டு பொங்கல் விழா உற்சவம் நடந்தது.
குன்னூர் டென்ட் ஹில் பகுதியில் அமைந்துள்ள முனீஸ்வரர் கோவிலில், 56வது ஆண்டு பொங்கல் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை, 8:00 மணிக்கு கணபதி ஹோமம், முனீஸ்வரர், ராஜ கணபதி சுவாமிகளுக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, தாரை தப்பட்டை மேளம் முழங்க அபிஷேக பொருட்களை சுமந்த மகளிரின் ஊர்வலம் தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கிருந்து, தந்தி மாரியம்மன் அலங்கார ரதம், புறப்பட்டு டென்ட்ஹில் முனீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது.
மதியம், 1:30 மணிக்கு அன்னதானம் நடந்தது. விழாவில், மயிலாட்டம், கொக்கிலி கட்டை ஒயிலாட்டம், பொய்கால் குதிரையாட்டம், கரகாட்டம், மான் கொம்பாட்டம், தப்பாட்டம், நெருப்பு சாகச விளையாட்டு, சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. பரிசளிப்பு விழா நடந்தது.
ஏற்பாடுகளை முனீஸ்வரர் கோவில் கமிட்டியினர் மற்றும் டென்ட்ஹில், பாலகிளாவா ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். ஊர்வலத்தில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நடனமாடி பங்கேற்றனர்.