/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

ADDED : ஏப் 15, 2025 09:19 PM

குன்னுார், ;குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் முக்கிய சித்திரை தேர்த்திருவிழா நேற்று நடந்தது.
தாசப்பளஞ்சிக செட்டியார் சமூகத்தினர் சார்பில் நடந்த இந்த விழாவில், துர்கையம்மன் கோவிலில் இருந்து ஊர்வலம் துவங்கியது. மகளிர் அபிஷேக பொருட்களுடன், செண்டை, மேள தாளம் முழங்க நடனத்துடன் கோவிலை வந்தடைந்தனர். மதியம், 1:25 மணியளவில் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. பக்தர்கள் உப்பு துாவி நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர்.
விழாவில், இலவச மோர்பந்தல் அமைக்கப்பட்டது. பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டன. தாசப்பளஞ்சிக இளைஞர் சங்கம் சார்பில், வள்ளி கும்மி நடனம், இன்னிசை நிகழ்ச்சி,வாண வேடிக்கை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
இன்று தையல் தொழிலாளர்களின் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. 18ல் முத்து பல்லக்கு, 19ல் புஷ்ப பல்லக்கு ஆகியவை நடக்கின்றன. பல்வேறு உபயதாரர்கள் சார்பில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. மே, 9ம் தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.