/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காலை உணவு திட்டத்தை வட்டார கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்
/
காலை உணவு திட்டத்தை வட்டார கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்
காலை உணவு திட்டத்தை வட்டார கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்
காலை உணவு திட்டத்தை வட்டார கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்
ADDED : அக் 28, 2024 11:30 PM
கோத்தகிரி : கோத்தகிரி பகுதி பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை வட்டார கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.
மாநில அரசு, ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்கள் நலனுக்ககாக, காலை உணவு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதனால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்து வருகிறது.
இத்திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்தும் வகையில், துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக, ஊட்டி ஊராட்சி ஒன்றியம், ஒன்னதலை அரசு துவக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் வனிதா திடீர் ஆய்வு செய்தார். உணவை ருசித்த அவர், பள்ளி குழந்தைகளிடம் காலை உணவின் தரம், அளவு மற்றும் சுவை ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின் போது, பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி, ஆசிரியர்கள் பாபு, தேவகி, பணியாளர்கள் சுசீலா மற்றும் சுமதி ஆகியோர் உடன் இருந்தனர்.