தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மணமேடைக்கு செல்லும் முன் ஓட்டளித்த மணப்பெண்

 மணமேடைக்கு செல்லும் முன் ஓட்டளித்த மணப்பெண்

 மணமேடைக்கு செல்லும் முன் ஓட்டளித்த மணப்பெண்


ADDED : ஏப் 23, 2026 06:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 06:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார் : கூடலுார் அருகே திருமண கோலத்தில் இருந்த மணப்பெண் ஓட்டளித்தபின் கோவிலுக்கு சென்று திருமணம் செய்தார்.

கூடலுார் பால்மேடு பகுதியை சேர்ந்த பத்மநாதன் சூரியகலா தம்பதியின் மகள் மேனகாவுக்கும், அங்கிரஸ் என்பவருக்கும் பொன்னானி மகாவிஷ்ணு கோவிலில் காலை, 9:30 மணிக்கு திருமண ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்காக, காலை மணமகள் மேகனாவை உறவினர்கள் பால்மேட்டில் இருந்து கோவிலுக்கு அழைத்து சென்றனர். கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பாண்டியர் -குடோன் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளித்த பின், கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டார்.

மேனகா கூறுகையில், 'என் திருமண எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று திருமண நாளில் மணமேடைக்கு செல்லும் முன் ஓட்டளித்தது என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us