/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குண்டும் குழியுமான மார்லிமந்து சாலை
/
குண்டும் குழியுமான மார்லிமந்து சாலை
ADDED : அக் 30, 2025 10:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:  ஊட்டி அருகே மார்லிமந்து சாலை வழியாக காரபிள்ளு, தாவணெ உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு அரசு பஸ்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகிறது. இச்சாலை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் விட்டுள்ளனர்.
அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் நட வடிக்கை எடுக்கப்படவில்லை. குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் இச்சாலையில் மழையால் ஆங்காங்கே பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட துறையினர் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும்.என, வலியுறுத் தப்பட்டுள்ளது.

