/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாலுகா அலுவலகம் செல்லும் பாதையில் புதர் மக்கள் நடந்து செல்வதில் சிரமம்

ADDED : செப் 30, 2025 10:21 PM

ஊட்டி, ; ஊட்டி தாலுகா அலுவலகம் செல்லும் குறுக்கு நடைபாதையில், காட்டுச் செடிகள் ஆக்கிரமித்துள்ளதால்,மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
ஊட்டி தாலுகா அலுவலகத்திற்கு வருவாய்துறை சம்பந்தமான ஆவணகள் பெற, நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர்.
ஊட்டி ஐயப்பன் கோவில் சாலையில், செவிலியர் விடுதியில் இருந்து அலுவலகத்திற்கு செல்ல, குறுக்கு நடைப்பதை அமைந்துள்ளது.
நடைபாதையின் இரு புறங்களிலும், காட்டு செடிகள் ஆக்கிரமித்து, பாதை இருப்பது தெரியாத அளவுக்கு, புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால், மக்கள் நடந்து சென்று வர முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, மழை நாட்களில் சென்று வருவோரின் ஆடை தண்ணீரில் நனைய வேண்டிய நிலை உள்ளது.
தவிர, புதர் ஆக்கிரமித்துள்ள நிலையில், விஷ ஜந்துக்கள், பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் அச்சத்திற்கு இடையே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் புதர் செடிகளை அகற்றி, மக்கள் நடந்து செல்ல ஏதுவாக குறுக்கு நடை பாதையை சீரமைப்பது அவசியம்.