UPDATED : மே 17, 2026 06:18 PM
ADDED : மே 17, 2026 06:01 PM

குன்னூர்:குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் பூத்துக் குலுங்கும் மலர்கள் சுற்றுலா பயணிகளை வசீகரித்து வருகிறது.
கோடை சீசன் களைகட்டி உள்ள நிலையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
கடந்த ஜன., மாதம் நடவு செய்யப்பட்ட சால்வியா, டேலியா, ஜினியா உட்பட 80 க்கும் மேற்பட்ட வகைகள் பூத்து குலுங்குகின்றன. பசுமை சூழ்ந்த இடங்களில்,
வசீகரித்து வரும் இந்த மலர்கள் மத்தியில் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வரும் 24 முதல் 26 வரை பழக்கண்காட்சி நடத்த தோட்டக்கலைத் துறையினர் திட்டமிட்ட நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்ட சபை தேர்தல் காரணமாக தேதிகள் மாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாற்றம் செய்யாமல் இதே தேதிகளில் நடத்த தோட்டக்கலைத் துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்..
