/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கட்டுப்பாட்டை இழந்த கார் பைக்குகள் மீது ஏறி விபத்து
/
கட்டுப்பாட்டை இழந்த கார் பைக்குகள் மீது ஏறி விபத்து
கட்டுப்பாட்டை இழந்த கார் பைக்குகள் மீது ஏறி விபத்து
கட்டுப்பாட்டை இழந்த கார் பைக்குகள் மீது ஏறி விபத்து
ADDED : செப் 22, 2024 11:36 PM

குன்னுார், : குன்னுார் பாய்ஸ் கம்பெனி அருகே நிறுத்தி வைத்திருந்த பைக்குகள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
குன்னுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சாலையோர பகுதிகளில் இருசக்கர வாகனங்களும் கார்களும் அதிக அளவில் நிறுத்தப்பட்டு செல்கின்றன.
இந்நிலையில், நேற்று ஊட்டியில் இருந்து வெலிங்டன் நோக்கி ஆபிரகாம் என்பவர் மனைவியுடன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், நிறுத்தி வைத்திருந்த இரு பைக்குகள் மீது ஏறி நின்று விபத்துக்குள்ளானது. அதில், அதிர்ஷ்டவசமாக இருவரும் காயமின்றி தப்பினர். வெலிங்டன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.