/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரேஸ் கோர்சில் சூழல் பூங்காவுக்கு இடையூறான கட்டுமானங்கள் விரைவில் அகற்றம்! அதிகாரிகளின் ஆய்வில் முடிவு
/
ரேஸ் கோர்சில் சூழல் பூங்காவுக்கு இடையூறான கட்டுமானங்கள் விரைவில் அகற்றம்! அதிகாரிகளின் ஆய்வில் முடிவு
ரேஸ் கோர்சில் சூழல் பூங்காவுக்கு இடையூறான கட்டுமானங்கள் விரைவில் அகற்றம்! அதிகாரிகளின் ஆய்வில் முடிவு
ரேஸ் கோர்சில் சூழல் பூங்காவுக்கு இடையூறான கட்டுமானங்கள் விரைவில் அகற்றம்! அதிகாரிகளின் ஆய்வில் முடிவு
ADDED : ஜூலை 11, 2024 10:32 PM

ஊட்டி : ஊட்டியில் குத்தகை பாக்கி செலுத்தாத காரணத்தால், மீட்கப்பட்ட ரேஸ்கோர்ஸ் மைதானம் சதுப்பு நிலம் என்பதால் 'சூழல் பூங்கா'வுக்கு இடையூறாக உள்ள கட்டுமானங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊட்டியில், வருவாய் துறையினருக்கு சொந்தமான, 52 ஏக்கர் நிலத்தில், 120 ஆண்டு காலமாக, 'மெட்ராஸ் ரேஸ் கிளப்' குத்தகை அடிப்படையில் குதிரை பந்தயங்களை நடத்தி வந்தது. அதில், ரேஸ் கிளப் நிர்வாகம், அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை, 1978ம் ஆண்டு முதல் செலுத்தாமல் இருந்தது.
இதுவரை, 822 கோடி ரூபாய் குத்தகை தொகை நிலுவை வைத்துள்ளது. இது தொடர்பான வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. கோர்ட், 2001ம் ஆண்டுக்கு பின், குத்தகை தொகை செலுத்த அறிவுறுத்தியது.
இருப்பினும் குத்தகை தொகையை ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் செலுத்தவில்லை. தொடர்ந்து, ஜூன், 21ம் தேதி, மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு வருவாய் துறையினர் 'நோட்டீஸ்' அனுப்பினர். அந்த நோட்டீசுக்கு மெட்ராஸ் கிளப் நிர்வாகம் பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து, ஜூலை, 5ம் தேதி ஊட்டி ஆர்.டி.ஓ., மகாராஜ் தலைமையில் வருவாய் துறையினர் 'சீல்' வைத்தனர்.
பழமை மாறாமல் சூழல் பூங்கா
மீட்கப்பட்ட ரேஸ் கோர்ஸ் மைதானம், 52 ஏக்கர் கொண்டதாகும். இங்கு 'சூழல் பூங்கா' அமைக்க தோட்டக்கலை துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
இங்கு மேற்கொள்ள உள்ள 'சூழல் பூங்கா'வுக்கான பணிகள் குறித்து நடந்த ஆய்வுக்கு பின், தோட்டக்கலை துறை திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்ப உள்ளனர்.
இந்நிலையில், குதிரை பந்தய மைதானத்தில் கொட்டகை, கழிப்பிட கட்டடம் உள்ளிட்ட கட்டுமானங்கள் உள்ளன. இவை ' சூழல் பூங்கா' அமைக்க இடையூறாக உள்ளதால், அங்குள்ள தற்காலிக கட்டுமானங்கள் அனைத்தையும் அகற்ற தோட்டக்கலை துறை முடிவு செய்துள்ளது.
தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,''தோட்டக்கலை துறைக்கு ஒப்படைக்கப்பட்ட ரேஸ் கோர்ஸ் மைதானம் சதுப்பு நிலம்.
அங்கு பழமை மாறாமல் 'சூழல் பூங்கா' அமைக்கப்படுவதால், மையப்பகுதிகளில் உள்ள கொட்டகை, கழிப்பிட கட்டடங்கள் அகற்றப்படும்.
அதன்பின் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் கீழ் அடுத்த கட்ட பணிகள் துவக்கப்படும்,'' என்றார்.