/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் முனைவோரின் பங்களிப்பு அவசியம்
/
பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் முனைவோரின் பங்களிப்பு அவசியம்
பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் முனைவோரின் பங்களிப்பு அவசியம்
பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் முனைவோரின் பங்களிப்பு அவசியம்
ADDED : செப் 29, 2025 10:00 PM
ஊட்டி:
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், நிமிர்ந்து நில் திட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் உயர் மட்ட மேலாண்மை நிகழ்ச்சி நடந்தது.
திட்ட நோக்கத்துக்கான விளக்க பதாகையை, கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டு பேசுகையில், ''மாநிலத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோரின் பங்களிப்பு மிகவும் அவசியம்.இளைஞர்களிடையே புத்தாக்கம், தொழில் முனைவிற்கான சிந்தனைகளை ஊக்குவிக்க, 'நிமிர்ந்து நில்' என்ற தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் செயல்பட்டு வருகிறது. நிறுவனங்கள் பிரச்னைகளை கண்டு பயப்படக்கூடாது. மாறாக அந்த பிரச்னையில் இருந்து ஒரு புதிய வணிகத்திற்கான யோசனையை கண்டுபிடிக்க வேண்டும்,'' என்றார். மேலும், நிமிர்ந்து நில் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் கல்லுாரிகளின் பங்களிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாநில திட்ட மேலாளர் சண்முகராஜ், 'இளைஞர் கண்டுபிடிப்பு, தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வைகள், சமூக பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் முனைவோரின் பங்களிப்பின் அவசியம்,' ஆகியவை குறித்து விளக்கினார்.முதன்மை பயிற்றுனர் கவுதம், நீலகிரி மாவட்ட திட்ட மேலாளர் கோபால்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.