/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நாட்டிற்கு தேவை திறன் மிக்க இளம் விஞ்ஞானிகள்; அறிவியல் இயக்க கருத்தரங்கில் தகவல்
/
நாட்டிற்கு தேவை திறன் மிக்க இளம் விஞ்ஞானிகள்; அறிவியல் இயக்க கருத்தரங்கில் தகவல்
நாட்டிற்கு தேவை திறன் மிக்க இளம் விஞ்ஞானிகள்; அறிவியல் இயக்க கருத்தரங்கில் தகவல்
நாட்டிற்கு தேவை திறன் மிக்க இளம் விஞ்ஞானிகள்; அறிவியல் இயக்க கருத்தரங்கில் தகவல்
ADDED : ஜூலை 10, 2025 08:44 PM
கோத்தகிரி; கோத்தகிரி கன்னேரிமுக்கு அரசு உயர்நிலைப்பள்ளி; கக்குச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கேரளம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கருத்தரங்குநடந்தது.
சிறப்பு கருத்தாளராக பங்கேற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ பேசியதாவது:
சமீபத்தில் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா,பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையத்தில் காலடி வைத்து சாதனை புரிந்துள்ளார். அவரது இந்த பயணம், இஸ்ரோவினுடையவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
அத்திட்டத்தின் படி, வரும், 2027ல் மூன்று விண்வெளி வீரர்களை பூமியில் இருந்து, 400 கி.மீ., உயரத்தில் உள்ள தாழ் பாதியில், மூன்று நாள் தங்கி சில ஆய்வுகளை செய்து மீண்டும் அவர்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய, மூன்று நாடுகளோடு, நான்காவது நாடாக இந்தியா விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், உலக அளவில் இந்தியாவின் விண்வெளி திறன் அனைத்து நாடுகளின் பாராட்டுதலுக்கு உரியதாகும்.
இதன் மூலம், பல நாடுகளின் செயற்கை கோள்களை இந்தியாவில் இருந்து, விண்வெளியில் செலுத்துவதற்கான வணிக வாய்ப்பு அதிகரிக்கும். சுபான்சு சுக்லா விண்வெளியில் இருந்து மீண்டும் திரும்பி வரும்போது, அவருடைய அனுபவம் நமது ககன்யான் திட்டத்திற்கு பெரிய முதலீடாக இருக்கும்.
மேலும், பல திட்டங்களை வருங்காலத்தில் முன்னெடுத்து செல்ல இந்த பயணம் பேருதவியாக இருக்கும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் கூலிகளாக செல்லும் மூளை திறன் உள்ள இளைஞர்களை, விண்வெளி ஆய்விற்கு ஈர்க்கும் வகையில் உதவிகரமாக இருக்கும். தற்போது, நமது நாட்டிற்கு மிகவும் தேவை படைப்பாற்றல் திறன் கொண்ட இளம் விஞ்ஞானிகள்தான். மாணவர்களை துாய அறிவியல் கல்விக்கு ஈர்ப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். இவ்வாறு, அவர் பேசினார்.
தலைமை ஆசிரியர்கள் அரவிந்தன், சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியின் மூலம், அறிவியல் மன்றம் செயற்பாடுகள் துவக்கி வைக்கப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.