/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மனித தலையை துாக்கி வந்த நாயால் பரபரப்பு
/
மனித தலையை துாக்கி வந்த நாயால் பரபரப்பு
ADDED : பிப் 16, 2024 12:36 AM
பந்தலுார்:பந்தலுார் அருகே கையுன்னி பகுதியில் மனித தலையை துாக்கி வந்த நாயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலுார் அருகே கையுன்னி, பி.ஆர்.எப். காலனி பகுதியில் நேற்று வளர்ப்பு நாய் ஒன்று வனப் பகுதியில் இருந்து மனித தலையை துாக்கி வந்துள்ளது. இதனால் பதட்டம் அடைந்த மக்கள் போலீசார் மற்றும் வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தாசில்தார் கிருஷ்ண மூர்த்தி, இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம், சப்--இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், வி.ஏ.ஓ., யுவராஜ், சேரங்கோடு ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்திரபோஸ் உள்ளிட்டோர் அப்பகுதிக்கு சென்று தேடி பார்த்தனர்.
அப்போது, கடந்த ஜன., 6 ஆம் தேதி காணாமல் போன, அதே பகுதியை சேர்ந்த, விஷ்ணு 24, என்ற பழங்குடியின இளைஞரின் உடல் துாக்கு மாட்டிய, அழுகிய நிலையில் கிடந்தது. உடலில் இருந்து தலையை நாய் துாக்கி வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து, உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.