/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுார் அருகே தண்ணீரை தேக்கி வைக்கும் மண் தடுப்பணை; கோடையில் வன விலங்குளுக்கு பெரும் பயன்

ADDED : மார் 18, 2025 05:10 AM

கூடலுார், : கூடலுார் அருகே, நீரோடை குறுக்கே, மண்ணை மட்டும் பயன்படுத்தி அமைக்கப்பட்ட தடுப்பணையில் தேங்கும் நீர், கோடையில் வனவிலங்குகள் குடிநீர் தேவை பூர்த்தி செய்து வருகிறது.
கூடலுார் வனக்கோட்டத்தில், கோடையில் வனவிலங்குகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, நீரோடை குறுக்கே, அமைக்கப்பட்ட பல சிமென்ட் தடுப்பணைகள் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகின்றன.
இந்நிலையில், கூடலுார், புளியம்பாறை அருகே, புளியம்வயல் பகுதியில், மூன்று ஆண்டுகளுக்கு முன், மண்ணை பலப்படுத்தி அமைக்கப்பட்ட தடுப்பணையில், நீர் கசிவு இன்றி, கோடையிலும் வனவிலங்குகள் குடிநீர் தேவை பூர்த்தி செய்து வருகிறது.
யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இப்பகுதியில் குடிநீர் தேவை பூர்த்தி செய்து வருகின்றன. உடல் வெப்பத்தை தணிக்க, நீராடி செல்கிறது. தடுப்பணை நிரம்பிய பின் தண்ணீர் வெளியேற மட்டும், சிமென்ட் பயன்படுத்தி கால்வாய் அமைந்துள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இந்த தடுப்பணை நீர், கோடையிலும் வனவிலங்குகள் குடிநீர் தேவை பூர்த்தி செய்வதுடன், அப்பகுதியும் பசுமையாக இருக்க உதவுகிறது. பராமரிப்பு செலவு பெரிதாக ஏதுமில்லை,' என்றனர்.
பொதுமக்கள் கூறுகையில்,'இப்பகுதியில், மண் பயன்படுத்தி அமைக்கப்பட்ட தடுப்பணை, மூன்று ஆண்டுகளாக எந்த பாதிப்பும் இன்றி, ஆண்டு முழுவதும் வனவிலங்குகள் குடிநீர் தேவை பூர்த்தி செய்து வருகிறது. வனப்பகுதியும் பசுமையாக உள்ளது.
எனவே, எதிர்காலத்து, வனவிலங்குகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வனப்பகுதியில் இதுபோன்ற தடுப்பணை அமைக்க, அரசு முன்வர வேண்டும்,'என்றனர்.