/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொலிவிழந்த கோடநாடு மரவியல் பூங்கா
/
பொலிவிழந்த கோடநாடு மரவியல் பூங்கா
ADDED : டிச 09, 2025 06:09 AM

கோத்தகிரி: கோத்தகிரி கோடநாடு மரவியல் பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
கோத்தகிரியில் இருந்து, 18 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள கோடநாடு காட்சிமுனை, சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
கோடை விழா நாட்களில் பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. வார விடுமுறை நாட்களில் கூட, கணிசமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வனத்துறை பராமரிப்பில் உள்ள கோடநாடு காட்சி முனை கோபுரம் அருகே, மரவியல் பூங்கா சிறப்பாக பராமரிக்கப்பட்டு இருந்த நிலையில், சுற்றுலா பயணிகள் குறிப்பாக சிறுவர்கள் இங்கு விளையாடி மகிழ்ந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக, மரவியல் பூங்கா, பராமரிக்கப்படாமல் புதர் மண்டி காணப்படுகிறது.
இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். எனவே, பயணியரின் வருகையை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு, மரவியல் பூங்காவை பொலிவு படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.

