/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தந்தி மாரியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் திருவிழா துவக்கம்
/
தந்தி மாரியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் திருவிழா துவக்கம்
தந்தி மாரியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் திருவிழா துவக்கம்
தந்தி மாரியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் திருவிழா துவக்கம்
ADDED : ஏப் 04, 2025 10:38 PM

குன்னுார்; குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு சித்திரை தேர் திருவிழா நேற்று துவங்கியது.
முதல் நிகழ்ச்சியாக, கர்நாடக சனாதன சாகித்திய சங்கம் சார்பில், 79வது ஆண்டு கொடியேற்று விழா நடந்தது. ஆழ்வார்பேட்டை கோதண்ட ராமர் கோவிலில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
தொடர்ந்து, அங்கிருந்து பால்குடம், அபிஷேக பொருட்களுடன் புறப்பட்ட ஊர்வலம், தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது.
அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, கோவிலில் இருந்து கோதண்ட ராமர் கோவிலுக்கு அம்மன் கொடி எடுத்த செல்லப்பட்டது. விநாயகர் கோவில் மண்டபம், கோதண்ட ராமர் கோவில் மண்டபத்தில் அன்னதானம் நடந்தது.
மாலை, 4:30 மணிக்கு கர்நாடகா கலாசார நிகழ்ச்சி மற்றும் மேளதாளத்துடன் உற்சவர் கொடியுடன் ஊர்வலம் புறப்பட்டது. தொடர்ந்து, கொடியேற்றம் நடந்தது.