/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போலீசார் நடத்திய அமைதி பேச்சு வார்த்தை 12 ஆண்டுகளுக்கு பின் சிறப்பாக நடந்த திருவிழா
/
போலீசார் நடத்திய அமைதி பேச்சு வார்த்தை 12 ஆண்டுகளுக்கு பின் சிறப்பாக நடந்த திருவிழா
போலீசார் நடத்திய அமைதி பேச்சு வார்த்தை 12 ஆண்டுகளுக்கு பின் சிறப்பாக நடந்த திருவிழா
போலீசார் நடத்திய அமைதி பேச்சு வார்த்தை 12 ஆண்டுகளுக்கு பின் சிறப்பாக நடந்த திருவிழா
ADDED : ஏப் 15, 2025 09:13 PM

கோத்தகிரி, ; கோத்தகிரி அருகே, இம்பிமர ஹட்டியில், போலீசார் நடத்திய அமைதி பேச்சுவார்த்தைக்கு பின், 12 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோத்தகிரி சோலுார் மட்டம் அருகே அமைந்துள்ள இம்பிமரஹட்டி கிராமத்தில், 20 குடும்பங்களில் மக்கள் வசிக்கின்றன. கிராமத்தில், இருதரப்பினருக்கு இடையே, இருந்து வந்த பிரச்னை காரணமாக, கடந்த, 12 ஆண்டுகளாக கிராமத்தில், ஸ்ரீ கன்னிமாரியம்மன் திருவிழா நடைபெறாமல் இருந்தது.
இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் கோவில் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில், வழக்கு அந்த நீதி மன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு குட முழுக்கு நடத்தப்பட்டது. நடப்பாண்டு, வருடாந்திர திருவிழா நடத்துவது குறித்து, போலீசாரிடம் கிராம மக்கள் அனுமதி கோரினர். அதன்படி, நீலகிரி எஸ்.பி., நிஷா உத்தரவுபடி, குன்னுார் டி.எஸ்.பி., ரவி மேற்பார்வையில், கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், மக்களுடன், சோலுார்மட்டம் எஸ்.ஐ., சந்திரன், தனிப்பிரிவு எஸ்.ஐ., ரமேஷ், காவலர் சரவணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஹேமலதா, செயல் அலுவலர் ராஜேஷ் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.
அதில், 'இரு தரப்பினரும் மன கசப்பு இல்லாமல், ஒருங்கிணைந்து திருவிழா நடத்துவது,' என, முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் திருவிழா துவங்கி, இரண்டு நாட்கள் சிறப்பாக நடந்தது.
கடந்த, 12 ஆண்டுகளுக்கு பின்பு, திருவிழா சிறப்பாக நடந்ததால், கிராம மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

