/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'வனச்சட்டத்தை விரைவில் நடைமுறை படுத்த வேண்டும்' ஆதிவாசிகள் நல சங்க கூட்டத்தில் தீர்மானம்

ADDED : ஜன 03, 2025 09:49 PM
கோத்தகிரி, ; கோத்தகிரியில் நடந்த ஆதிவாசி சமுதாய நலச்சங்க கூட்டத்தில், வனச்சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்,' என,வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்திற்கு, சங்க நிர்வாகி ரங்கசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் மணியன், மருதாச்சலம் மற்றும் பெள்ளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பொதுசெயலாளர் கணேஷ் கம்டோவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள்: 'வனச்சட்டம் - 2006' என்பதை அரசு நடைமுறை படுத்துவதுடன், ஏற்கனவே விவசாயம் செய்து வரும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது. பூர்வீக நிலங்களை வனத்துறை அபகரிக்காமல் இருப்பதுடன், நிலங்களை பாதுகாக்க போராட்டம் நடத்தும் பழங்குடியின விவசாயிகளை மிரட்டுவதை அதிகாரிகள் நிறுத்த வேண்டும்.
படித்த பழங்குடியின மாணவர்களுக்கு, வேலை வழங்குவதுடன், எஸ்.டி., சான்று பெறுவதை, அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், டிஜிட்டல் முறையில் வெளிப்படையாக வழங்க வேண்டும். பழங்குடினர் மீது பொய்யான வழக்கு தொடுக்க முயற்சிக்கும் அதிகாரிகள் மீது வழக்கு தொடுப்பது என்பன உட்பட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், தோடர், கோத்தர் மற்றும் இருளர் பழங்குடின மக்கள் பலர் பங்கேற்றனர். நிர்வாகி சாந்தி நன்றி கூறினார்.