/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வளர்ப்பு யானைகளுக்கு பசுந்தீவனம் விலைக்கு வாங்கி வழங்கும் வனத்துறை
/
வளர்ப்பு யானைகளுக்கு பசுந்தீவனம் விலைக்கு வாங்கி வழங்கும் வனத்துறை
வளர்ப்பு யானைகளுக்கு பசுந்தீவனம் விலைக்கு வாங்கி வழங்கும் வனத்துறை
வளர்ப்பு யானைகளுக்கு பசுந்தீவனம் விலைக்கு வாங்கி வழங்கும் வனத்துறை
ADDED : ஜன 18, 2024 01:47 AM

கூடலுார் : 'முதுமலை வளர்ப்பு யானைளுக்கு இனி பசுந்தீவனமும், வனத்துறை சார்பில் வழங்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு, அபயாரண்யம் யானைகள் முகாமில், 27 யானைகள் பராமரித்து வருகின்றனர். அவைகளுக்கு வனத்துறை சார்பில் தினமும் காலை, 9:00 மணி, மாலை, 6:00 மணிக்கு அரிசி சாப்பாடு, ராகி, கொள்ளு, மினரல்மிக்சர், தேங்காய், வெள்ளம், கரும்பு, உப்பு ஆகிய உணவுகள் வழங்கப்படுகிறது.
காலை உணவுக்கு பின், யானைகள் மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு அழைத்து சென்று வருகின்றனர். இரவு நேரத்தில் வளர்ப்பு யானைகளுக்கு தேவையான பசுந்தழைகளை, மரங்களிலிருந்து வெட்டி எடுத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், மரங்கள் பாதிக்கப்படுகிறது.
இதனை தடுக்க, அவைகளுக்கு இரவில் தேவையான பசுந்தழைகளை வனத்துறை சார்பில் வழங்கும் பணி நேற்று முன்தினம், துவக்கப்பட்டது. பசுந்தீவனம் வழங்கும் பணியை முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ், துணை இயக்குனர் வித்யா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, ' இனி வளர்ப்பு யானைகளுக்கான பசுந்தழை மரங்களில் இருந்து வெட்டுவதில்லை,' என, யானை பாகன்கள் உதவியாளர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் வனச்சரகர் மேகலா, வன ஊழியர்கள் பங்கேற்றனர்.
முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ் கூறுகையில்,''முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் பகல் நேரத்தில் வனப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்று முகாம் திரும்பும்போது, மரங்களிலிருந்து, பசுந்தழைகளை வெட்டி எடுத்து வந்து, இரவில் யானைகளுக்கு வழங்கி வந்தனர். இதனால், மரங்கள் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க, வளர்ப்பு யானைகளுக்கு தேவையான பசுந்தீவனத்தை வெளியில் விலைக்கு வாங்கி வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதனால், மரங்களிலிருந்து பசுந்தழைகள் வெட்டப்பட மாட்டாது,'' என்றார்.