/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரவில் சாலையில் சிறுத்தை உலா; மாலையில் தோட்டத்தில் தஞ்சம்
/
இரவில் சாலையில் சிறுத்தை உலா; மாலையில் தோட்டத்தில் தஞ்சம்
இரவில் சாலையில் சிறுத்தை உலா; மாலையில் தோட்டத்தில் தஞ்சம்
இரவில் சாலையில் சிறுத்தை உலா; மாலையில் தோட்டத்தில் தஞ்சம்
ADDED : பிப் 15, 2025 06:43 AM

குன்னுார்; குன்னுார் அட்டடி கிராமத்தில் இரவு நேரத்தில் மட்டுமின்றி மாலை நேரத்திலும் சிறுத்தை உலா வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக, குடியிருப்பு பகுதிகளிலும், தேயிலை எஸ்டேட்டுகளிலும் உலா வருகின்றன.
இந்நிலையில், குன்னுார் அருகே உள்ள அட்டடி கிராமத்தில் கடந்த, 2 நாட்களுக்கு முன்பு இரவு, 10:15 மணிக்கு சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து சென்றது, அங்குள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணி அளவில், சாலையை கடந்து தேயிலை எஸ்டேட்டிற்கு சென்றது.
இரவு நேரங்களில் மட்டுமே வந்து சென்ற சிறுத்தை, தற்போது மாலை நேரங்களிலும் உலா வருகிறது. இதனால், மக்கள் மாலை, இரவு நேரங்களிலும் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே, வனத்துறையினர் கண்காணித்து சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.