ADDED : மே 23, 2026 03:29 AM

நீலகிரி மாவட்டம், குன்னுார் காட்டேரி பூங்காவில், கோடை விழாவை முன்னிட்டு, மலை பயிர்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில், முக்கிய கருப்பொருளாக, கடலோர பகுதிகளை சார்ந்து வாழும் மீனவ பெண்களின் முக்கியத்துவம் மற்றும் வாழ்வியலை மையப்படுத்தி, அலங்காரங்கள் இடம்பெற்றன. இளநீர், நுங்கு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட படகில் மீன் பிடிக்கும் பெண் போன்ற வடிவமைப்பு, சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்தது.
குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில், கோடை விழாவை முன்னிட்டு, மலைப்பயிர்கள் கண்காட்சி நேற்று குன்னுார் காட்டேரி பூங்காவில் துவங்கியது.
கண்காட்சியின் முக்கிய கருப்பொருளாக, கடலோர பகுதிகளை சார்ந்து வாழும் மீனவ பெண்களின் முக்கியத்துவம் மற்றும் வாழ்வியலை மையப்படுத்தி காட்சி அமைப்புகள் இடம் பெற்றிருந்தன.
தேயிலை, காபி, கோகோ, முந்திரி வெற்றிலை பாக்கு, ரப்பர் போன்ற 10 வகையான மலைப்பயிர்கள் மற்றும் இளநீர், பனை, நுங்கு பயன்படுத்தி, படகு, மீனவப்பெண், நங்கூரம், துடுப்பு, சங்கு, கலங்கரை விளக்கம் மற்றும் தமிழக வரைபடம் போன்ற கண்கவர் வடிவங்கள், அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டன.
தோட்டக்கலை இணை இயக்குநர் நவநீதா கூறுகையில்,''ஒன்பது டன் விளை பயிர்களை பயன்படுத்தி இந்த வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டன,'' என்றார்.
விழுப்புரம் மாவட்ட சுற்றுலாப்பயணி பிரியதர்ஷினி கூறுகையில்,''இங்குள்ள படகை துாரத்திலிருந்து பார்க்கும் போது, நிஜமான பெண் மீன் பிடிப்பது போல தத்ரூபமாக தெரிந்தது,'' என்றார்.
