/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அதிகரிக்கும் கோடை வெயில் தாக்கம் கூடலுாரில் நுங்கு விற்பனை அமோகம்
/
அதிகரிக்கும் கோடை வெயில் தாக்கம் கூடலுாரில் நுங்கு விற்பனை அமோகம்
அதிகரிக்கும் கோடை வெயில் தாக்கம் கூடலுாரில் நுங்கு விற்பனை அமோகம்
அதிகரிக்கும் கோடை வெயில் தாக்கம் கூடலுாரில் நுங்கு விற்பனை அமோகம்
ADDED : மார் 21, 2025 02:31 AM

கூடலுார்: கூடலுார் பகுதியில், வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தது. கடந்த இரு தினங்களுக்கு முன், மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் வரை மிதமான கோடை மழை பெய்ததால், வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்திருந்தது.
ஆனால், தொடர்ந்து கோடை மழை பெய்யாததால், இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.
இதனால், பகல் நேரங்களில் வெளியில் செல்வதை பலரும் தவிர்த்து வருகின்றனர். உடல் வெப்பத்தை தணிக்க தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர், நுங்கு பயன்படுத்த துவங்கி உள்ளனர்.
வெளியூர் வியாபாரிகள் சமவெளி பகுதிகளில் இருந்து வாகனங்களில் நுங்கு, பதநீர் எடுத்து வந்து சாலை ஓரங்களில் வைத்து, மூன்று நுங்கு, 50 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
வெளியூர் வியாபாரிகள் கூறுகையில், 'சமவெளி பகுதியில் இருந்து, நுங்கு எடுத்து வந்து விற்பனை செய்து வருகிறோம். அங்கிருந்து இங்கு வருவதற்கான போக்குவரத்து செலவு அதிகம் என்பதால், அதற்கு ஏற்ற விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கிறோம்,' என, கூறினர்.