/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உழவர் சந்தை அமைக்கும் விவகாரம்; எதிர்ப்பு தெரிவித்த கோத்தர் பழங்குடிகள்
/
உழவர் சந்தை அமைக்கும் விவகாரம்; எதிர்ப்பு தெரிவித்த கோத்தர் பழங்குடிகள்
உழவர் சந்தை அமைக்கும் விவகாரம்; எதிர்ப்பு தெரிவித்த கோத்தர் பழங்குடிகள்
உழவர் சந்தை அமைக்கும் விவகாரம்; எதிர்ப்பு தெரிவித்த கோத்தர் பழங்குடிகள்
ADDED : டிச 26, 2024 10:10 PM
கோத்தகிரி; கோத்தகிரி மார்க்கெட் அருகே, உழவர் சந்தை அமைப்பது தொடர்பாக, கோத்தர் பழங்குடியின மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோத்தகிரி பஜார் பகுதியில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு உழவர் சந்தை அமைக்கப்பட்டது. குறுகலான சாலை மற்றும் போக்குவரத்து வசதி குறைவு காரணமாக, மக்களின் வருகை குறைந்ததால், உழவர் சந்தை மூடப்பட்டது.
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உழவர் சந்தை அமைக்க அரசு முடிவெடுத்தது. அதன் படி, நில அளவை செய்யப்பட்டு, பணிகள் துவங்கும் தருவாயில் உள்ளன.
இந்நிலையில், 'மார்க்கெட் எதிர்புறத்தில் நேரு பூங்காவை ஒட்டி உள்ள நிலம் தங்களுக்கு சொந்தமானது,' என, புது கோத்தகிரி பகுதியில் வசிக்கும் கோத்தர் பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குன்னுார் ஆர்.டி.ஓ., சங்கீதா மற்றும் பேரூராட்சிதலைவர் ஜெயக்குமாரி ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், 'தாலுகா அலுவலகம் பின்புறம் மற்றும் நுாலகம் அருகே உழவர் சந்தை அமைக்க இடத்தை தேர்வு செய்து தர வேண்டும்,' என, விவசாயிகள் தரப்பில் உறுதியாக வலியுறுத்தப்பட்டது.
'குறிப்பிட்ட இடம் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது,' என, அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததை அடுத்து, அனைவரும்கலைந்து சென்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

