/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ரேடியோ' காலருடன் பஜாருக்குள் புகுந்த யானை: மயக்க ஊசி செலுத்தி பிடித்த கேரள வனத்துறை

ADDED : பிப் 02, 2024 10:35 PM

பந்தலுார்:கேரளா மாநிலம் வயநாடு மானந்தவாடி பகுதியில், 'ரேடியோ' காலருடன் முகாமிட்டுள்ள யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் முகாமிட்டு, சஹாரா தோட்டத்தில், தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்த யானையை, கடந்த ஜன., 16ல், கர்நாடக வனத்துறையினர் பிடித்தனர். இந்த யானைக்கு 'தண்ணீர்' என்று பெயரிடப்பட்டு, ரேடியோ காலருடன் மூலஹள்ளி வனத்தில் விடுவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த யானை வனப்பகுதி வழியாக நடந்து, 200 கி.மீ. தொலைவு உள்ள, கேரளா மாநிலம் மானந்தவாடி பகுதியில் புகுந்தது. நேற்று காலை, யானை சார்பதிவாளர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் கடைவீதிகள், குடியிருப்புகள் வழியாக உலா வந்தது.
அதனை தொடர்ந்து, இந்த யானையை மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க, கேரளா. மாநில வனத்துறை உத்தரவு பிறப்பித்தது. யானையை பிடிக்கும் பணியின்போது, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், 144 தடையுத்தரவு கலெக்டர் ரேணுகாராஜ் பிறப்பித்துள்ளார்.
விக்ரம், சூர்யா ஆகிய இரண்டு கும்கிகள் வரவழைக்கப்பட்டது. கால்நடை டாக்டர்கள், வனத்துறையினர் அடங்கிய குழுவினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின், கும்கிகள் உதவியுடன் யானை லாரியில் ஏற்றப்பட்டது.
வனத்துறையினர் கூறுகையில்,' கேரள மானந்தவாடி பகுதியில் சுற்றி மக்களுக்கு இடையூறு செய்த 'தண்ணீர்' யானை பிடிக்கப்பட்டது. அதனை கர்நாடக மாநிலம் பந்திப்பூர் பகுதிக்கு கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றார்.