/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சமையல் அறைகள் துவம்சம்; கரடிகளால் மக்கள் அச்சம்
/
சமையல் அறைகள் துவம்சம்; கரடிகளால் மக்கள் அச்சம்
ADDED : அக் 29, 2024 08:43 PM
குன்னுார் : குன்னுார் அருகே நான்சச் பகுதியில் இரவில் புகுந்த கரடிகள் வீடுகளின் சமையலறைகளை துவம்சம் செய்தன.
குன்னுார் குடியிருப்பு பகுதிகளில் இரவில் வரும் கரடிகள் கதவுகளை உடைத்து எண்ணெய், அரிசி உட்பட உணவு பொருட்களை உட்கொண்டு செல்வது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அதிகாலை நான்சச் பகுதிக்கு வந்த இரு கரடிகள் அங்குள்ள, விஜயா, பாலன், முத்துலட்சுமி, சின்னவன் உட்பட பலரின் வீட்டு சமையலறை கதவுகளை உடைத்து உள்ளே சென்று எண்ணெய் உட்பட உணவு பொருட்களை உட்கொண்டு சென்றுள்ளன. சப்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் பலரும், அச்சத்தில் வெளியே வராமல் இருந்தனர். தகவலின் பேரில், ரேஞ்சர் ரவீந்திரநாத் தலைமையில், வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். 'இப்பகுதியில் கூண்டு வைத்து கரடிகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.