/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரியில் கம்பட்டராயர் பண்டிகை கோலாகலம் கோத்தர் பழங்குடியின மக்கள் பங்கேற்று கொண்டாட்டம்

ADDED : டிச 30, 2025 06:56 AM
கோத்தகிரி: கோத்தகிரி நேரு பூங்கா வளாகத்தில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடை திறக்கப்படும் பழமை வாய்ந்த 'அய்யனார்-அம்மனோர்' கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது.
கடந்த, 22ம் தேதி பிறை கழித்தல் நிகழ்ச்சியில் இருந்து, விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள், கிராம கோவில் முன்புறத்தில் இரவில் தீமூட்டி அதனைச் சுற்றி நடனமாடி ஐயனை வழப்பட்டு வருகின்றனர்.
பண்டிகைக்காக, விரதம் மேற்கொண்டுள்ள பூசாரிகள் ஈஸ்வரன் மற்றும் மாய கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், கோவில் கூரையை புதுப்பிக்க, வனப்பகுதியில் இருந்து மூங்கில் இலைகளை சேகரித்து வந்தனர்.
தொடர்ந்து, பூசாரிகள் உட்பட, 11 பேர், 100 கிலோ எடைக்கொண்ட இளவட்ட கல்லை, தங்களது நடு விரலால் துாக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த கல் மேலே ஏழும் உயரத்தை பொறுத்து கிராமம், அந்த அளவுக்கு சிறப்பு பெறும் என்பது ஐதீகமாக உள்ளது.
நேற்று முன்தினம் முக்கிய திருவிழா கம்பட்டராயர் பண்டிகை நடந்தது. நடை திறக்கப்பட்ட கோவிலில், நெய் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.தொடர்ந்து, பாரம்பரிய நடனம் இடம்பெற்றது.
தொடர்ந்து, கிராமத்திற்கு ஊர்வலமாக சென்று, நெய் சேர்த்த உப்பு சாம்பார் பிரசாதம் ஐயனுக்கு படையலிட்டு, பிறகு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, கோத்தரின ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக, குழு நடனம் ஆடி மகிழ்ந்தனர். நாளை மறுநாள் விழா நிறைவடைகிறது.
இதேபோல, மாவட்டத்தில் கோத்தர் பழங்குடியின மக்கள் வசிக்கும், ஏழு கிராமங்களில் விழா கொண்டாடப்படுகிறது.
இதில், புது கோத்தகிரி உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கோத்தர் பழங்குடியின மக்கள் பங்கேற்று, கம்பட்டராயரை வழிப்பட்டனர்.